இந்தியா

1 காதலன், 2 காதலிகள்.. ஒரே மேடையில் நடந்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ காட்சி..

Summary:

தன்னை காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தன்னை காதலித்த இரண்டு பெண்களையும் இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதாகும் சந்து மவுர்யா. விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்துவரும் சந்து மவுர்யா ஒருமுறை தோகபால் என்னும் பகுதிக்கு வேலை காரணமாக சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த சுந்தரி என்ற 21 வயது இளம் பெண்ணை சந்தித்துள்ளார்.

பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இப்படியே ஒரு ஆண்டு முடிவடைந்தநிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில்தான் ஹசீனா பகேல் என்ற இளம் பெண் சந்து மவுர்யாவின் வாழக்கையில் வந்துள்ளார்.

ஒருமுறை மவுர்யாவின் கிராமமான திக்ரலோஹங்காவில் நடந்த திருமா நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த ஹசீனா பகேல் அங்கு சந்து மவுர்யாவை சந்தித்துள்ளார். உடனே அவர் மீது அந்த பெண்ணிற்கு காதல் வர, அந்த காதலை அவரிடம் கூறியுள்ளார். ஆனால் தான் வேறொரு பெண்ணை ஏற்கனவே காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் மவுர்யா கூறியுள்ளார்.

ஆனாலும் மவுரியாவை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார் ஹசீனா பகேல். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு பெண்களையும் அழைத்து மவுரியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரண்டு பெண்களுமே அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்ததை அடுத்து இந்த தகவலை மவுரியா தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மவுரியாவின் குடும்பத்தினர் மூவருக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை செய்து, அதன்படி திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் சுமார் 500 கும் அதிகமாக கிராம மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேநேரம் முதல் காதலியான சுந்தரியின் குடும்பத்தினர் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரே மேடையில் இரண்டு பெண்களையும் மவுரியா திருமணம் செய்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement