தன் மனைவிக்காக உயிரையே தியாகம் செய்ய தயாரான கணவன்..! மருத்துவமனையில் கவலைக்கிடம்..!

தன் மனைவிக்காக உயிரையே தியாகம் செய்ய தயாரான கணவன்..! மருத்துவமனையில் கவலைக்கிடம்..!


Indian Man In UAE Suffers 90 Per Cent Burns While Trying To Save Wife

கேரளாவை சேர்ந்த இளம் தம்பதி ஒருவர் ஐக்கிய அரபு எமிரகத்தில் (UAE) உயிருக்கு போராடும் நிலையில் அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் அனில் நினன். 32 வயதாகும் அனில் தனது மனைவி நீனு மற்றும் 4 வயது மகனுடன் ஐக்கிய அரபு எமிரகத்தில் (UAE) வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனில் மனைவி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டில் ஏற்பட்ட மின்கசிவில் வீடு முழுவதும் தீ பிடித்துள்ளது. மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அவரை அனில் காப்பாற்ற முயற்சித்ததில் அனில் மீது தீ பிடித்துள்ளது.

இந்த தீ விபத்தில் அனில் 90 % தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனில் மனைவி நீனு குறைவான தீ காயங்களுடன் இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.