இந்தியா

இறந்தது எனது ஒரே மகன்! ஆனாலும் பெருமை படுகிறேன்! நாட்டிற்காக உயிர்விட்ட ராணுவ வீரரின் தாய்!

Summary:

Indian army man mom talk about her son

கடந்த 40  ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியா - சீனா ராணுவம் இடையே மோதல் வெடித்து பலி ஏற்பட்டிருப்பது என்பது இதுவே முதன்முறையாகும். 

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக சமீபத்தில் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் இரு நாட்டின் ராணுவ படைகளும் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த திடீர் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீன இராணுவத்தால் கொல்லப்பட்ட கர்னல் பி. சந்தோஷ் பாபுவின் தாய், தனது மகன் நாட்டின் நலனுக்காக மிக உயர்ந்த தியாகத்தை செய்ததில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சந்தோஷ் பாபுவின் தாய் கூறுகையில், சந்தோஷ் பாபு எனது  ஒரே மகன். அவர் இறந்ததால் சோகமாக இருக்கிறேன்.

ஆனாலும், என் மகன் இறப்பை எண்ணி பெருமை படுகிறேன். என் மகன் நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறான். ஒரு தாயாக நான் சோகமாக இருக்கிறேன் என்று கண்ணீருடன் சந்தோஷ் பாபுவின் தாயார் மஞ்சுளா கூறுகிறார். 


Advertisement