அடடா என்ன ஒரு நாட்டுப்பற்று; பிறந்த குழந்தைக்கு இப்படியும் பெயர் வைத்து அசத்தியுள்ள தம்பதியினர்.!

அடடா என்ன ஒரு நாட்டுப்பற்று; பிறந்த குழந்தைக்கு இப்படியும் பெயர் வைத்து அசத்தியுள்ள தம்பதியினர்.!


india-rajastan---mahaversingh---miraj

தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு மிராஜ் என்று பெயர் வைத்து அசத்தியுள்ளனர் தேசப்பற்று மிக்க தம்பதியினர்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இந்தியப் பகுதிகள் மற்றும் அதன் எல்லைப் பகுதிகளுக்குள் நுழைந்து அங்கு முகாமிட்டிருந்த தீவிரவாத அமைப்புகளின் மீது திடீரென தாக்குதல் தொடுத்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகியுள்ளார்கள் என்ற தகவல்கள் வெளிவந்தது.

India

இந்நிலையில் அன்றைய தினம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகாவீர் சிங் ரத்தோர் என்பவரின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் வெற்றிகரமாக பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுடைய குழந்தைக்கு மிராஜ் என்ற இந்திய விமானத்தின் பெயரை சூட்டி மகிழ்ந்தனர்.

இது தொடா்பாக ரத்தோா் செய்தியாளா்களிடம் பேசுகையில், எங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோா் ராணுவத்தில் பணியாற்றியுள்ளனா். தற்போதும் பலரும் நாட்டுக்காக பாதுகாப்பு படையில் சேவை செய்து வருகின்றனா். கடந்த 26ம் தேதி இந்தியா விமானப்படைக்குச் சொந்தமான மிராஜ் ரக விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று அந்நாட்டில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. 

India

3.30 மணியளவில் தொடங்கிய தாக்குதல் சரியாக 5 மணியளவில் நிறைவடைந்ததாக அதிகாாிகள் தொிவித்துள்ளனா். 5 மணிக்கு தான் எனக்கும் மகன் பிறந்தான். இந்தியா விமானப்படையின் வீரத்தை பாராட்டும் விதமாகவும், அவா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் எனது குழந்தைக்கு “மிராஜ்” என்று பெயா் சூட்டியுள்ளோம் என்று அவா் தொிவித்துள்ளாா்.