தமிழகம் இந்தியா

இந்திய ரயில்வேயில் பல்வேறு பணியிடங்கள்; நெருங்குகிறது கடைசி தேதி.!

Summary:

india railway announced diffrent jobs - last date 31/03/2019

இந்திய ரயில்வேயில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பணி நாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அரசு வேலை தேடுவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. விண்ணப்பிக்க இன்னும் சில தினங்களே உள்ளது குறிப்பிடதக்கது.

கல்வித் தகுதி: அனைத்து பணியிடங்களுக்கும் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணி 1: இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்.
பணியிடம்: நாடுமுழுவதும் 
காலி இடங்கள்: 4319 
சம்பளம்: ரூ. 19,900 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி 
வயது தகுதி: 18 முதல் 30 வரை 
இணையதளம்: http://rrbajmer.gov.in 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/03/2019 

பணி 2: குட்ஸ் கார்டு 
பணியிடம்: நாடு முழுவதும் 
காலி இடங்கள்: 5748 
சம்பளம்: ரூ. 29,200 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி 
வயது தகுதி: 18 முதல் 33 வரை 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/03/2019 

பணி 3: ஸ்டேஷன் மாஸ்டர் 
பணியிடம்: நாடு முழுவதும் 
காலி இடங்கள்: 6865 
சம்பளம்: ரூ. 35,400 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி https://ajmer.rrbonlinereg.co.in/ 
வயது தகுதி: 18 முதல் 33 வரை 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/03/2019 

இந்த பணியிடங்கள் தவிர ரயில் கிளார்க், பயணச்சீட்டு வழங்குபவர், நேரம் கண்காணிப்பாளர், இளநிலை கணக்கர் உள்ளிட்ட பணிகளும் உள்ளது. இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்: 

http://rrbajmer.gov.in/upload_pdf/rrbajmer2.pdf 

விண்ணப்பிக்க: https://ajmer.rrbonlinereg.co.in/ 


Advertisement