தமிழகம் இந்தியா

நான் தமிழ் மொழியின் தீவிர ரசிகன்; தமிழகத்தில் பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி உரை.!

Summary:

india prime minister narendira modi

பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

அதனை உறுதி செய்யும் விதமாக விருதுநகரில் பாஜக கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.  அதில், நான் எப்பொழுதும் தமிழ்மொழியின் ரசிகன்; ஆனால் தமிழ் மொழி பேசத் தெரியாத துரதிஷ்டசாலியாக உள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றும் 'மன்கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.


Advertisement