ஆப்கானிஸ்தானுக்கு 10 மெட்ரிக் டன் கோதுமை வழங்கிய இந்தியா.!



india-has-provided-10-mt-of-wheat-to-afghanistan

Both Images Are File Pic

இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றாகவும், அண்டை நாடாகவும் இருப்பது ஆப்கானிஸ்தான். தற்போது அந்நாடு பொருளாதார சிக்கலில் இருப்பதால் உணவு பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. 

அந்நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையுடன் உதவும் பொருட்டு, இந்தியா சமீபத்தில் பத்து டன் மெட்ரிக் கோதுமை வழங்கி இருக்கிறது. இந்த தகவலை ஐநா உணவு அமைப்பு உறுதி செய்துள்ளது. 

இந்தியா

கடந்த மாதம் ஈரான் நாட்டில் உள்ள சவகர் துறைமுகத்தின் வழியாக மனிதாபிமான அடிப்படையில் இந்தியா 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கியது. தற்போது மேலும் 10 மெட்ரிக் டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. 

அதற்கு முன்னதாக பாகிஸ்தானின் நில எல்லை வழியே இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.