#JustIN: இந்தியா-கனடா உறவில் உச்சபட்ச பதற்றம்; கனடா ராஜதந்திரி வெளியேற உத்தரவு.. மத்திய அரசு பரபரப்பு பதிலடியின் பின்னணி என்ன?..!

#JustIN: இந்தியா-கனடா உறவில் உச்சபட்ச பதற்றம்; கனடா ராஜதந்திரி வெளியேற உத்தரவு.. மத்திய அரசு பரபரப்பு பதிலடியின் பின்னணி என்ன?..!



india-expel-canadian-official

 

கனடா பிரதமர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, கனடாவில் வசித்து வந்த காலிஸ்தானிய புலிகள் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் 06ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசு உள்ளது. அவர் கனடா அரசின் குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டவர். 

இந்திய அரசு எல்லைதாண்டி கனடா மண்ணுக்குள் இவ்வாறான செயலை செய்தது கண்டிக்கத்தக்கது. கனடாவில் இருக்கும் ரா அமைப்பின் உயர் அதிகாரி பவன் குமார் ராய் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என தெரிவித்தார்.

இந்த விவகாரத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, "கனடா அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. இந்திய அரசு கனடா மண்ணுக்குள் எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை. 

கனடாவில் நடத்த படுகொலைக்கும் - இந்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதபோது, இந்திய அரசை குறிப்பிட்டு கனடா பிரதமர் பேசியதை கண்டிக்கிறது. அவர்களின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரிக்கிறது. இவ்வாறான அபத்தமான குற்றசாட்டுகளை இன்னும் சுமத்த வேண்டாம். 

கனடாவுக்குள் நடக்கும் கொலைகள், குற்றங்கள் போன்ற விஷயங்களுக்கு இந்திய அரசு எப்படி பொறுப்பேற்கும்?. ஜனநாயகவாதிகளாக இருக்கும் நாங்கள் எவ்வித எல்லைதாண்டிய வன்முறையிலும் எடுபடவில்லை. 

கனடா மண்ணில் இந்தியர்களுக்கு எதிராகவும், இந்திய மக்களுக்கு எதிராகவும் நடக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து தண்டிக்க வேண்டுகோள் வைப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள கனடா உயர் அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, 5 நாட்களுக்குள் அவர் வெளியேற காலக்கெடு விதித்துள்ளது.

பஞ்சாபில் பிறந்த ஹர்தீப் சிங் கனடாவில் குடியேறி, தன்னை கனடா குடிமகனாக ஆகிக்கொண்டார். அதேபோல, அவர் காலிஸ்தான் புலிகள் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் இந்தியாவில் சாமியார் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக என்.ஐ.ஏ அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் நபர் ஆவார்.