மூதாட்டி மீது ஏறிய குப்பை லாரி; சிறிதும் காயமின்றி தப்பிய அதிசய நிகழ்வு! எங்கு தெரியுமா?

india - gujarath - in old lady accident wastage lorry


india - gujarath - in old lady accident wastage lorry

குஜராத்தின் சூரத் நகரில் மூதாட்டியை கவனிக்காத குப்பை லாரி டிரைவர், மூதாட்டி மீது லாரியை ஏற்றி சிறிது தூரம் சென்றாலும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சூரத்தின் பி.ஆர்.சி. பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ரமிலா சொலங்கி (55 ). இவர் சூரத் மாநகராட்சியில் துப்பறவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

மூதாட்டி அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பணிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிலுக்கு முன்பு நின்று கண்களை மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் நின்று கொண்டு இருப்பதை கவனிக்காத லாரி டிரைவர் குப்பை லாரியை பின்புறமாக நகர்த்தியுள்ளார். பக்தி பரவசத்தில் இருந்த மூதாட்டிக்கும் லாரியின் சத்தம் கேட்கவில்லை.
 
இந்நியில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த லாரியானது மூதாட்டி மீது ஏறி சிறிது தூரம் சென்று உள்ளது. அப்போதுதான் டிரைவருக்கு தெரிந்துள்ளது ஆனாலும் மூதாட்டிக்கு சிறிதும் காயம் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார். இக்காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்திலும் பதிவாகியுள்ளது.

 இதுகுறித்து அந்த மூதாட்டி கூறும்போது, “நான் கும்பிட்ட சாய் பாபா தான் என் உயிரைக் காப்பாற்றியுள்ளார்” என்று தெரிவித்தார்.