அதிகரித்து வரும் குரங்கு அம்மை... கேரளாவில் மேலும் ஒருவர் பாதிப்பு... பரிசோதனை தீவிரம்...

அதிகரித்து வரும் குரங்கு அம்மை... கேரளாவில் மேலும் ஒருவர் பாதிப்பு... பரிசோதனை தீவிரம்...


Increased in monkey pox virus

நாடு முழுவதும் குரங்கு அம்மை என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. தற்போது கேரளாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில் அம்மாநிலம் முழுவதும் குரங்கு அம்மைக்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முதலில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிதாக துபாயிலிருந்து கேரளா வந்த கண்ணூரை சேர்ந்த நபர் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Monkeypox virus

மேலும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் புனேவிருந்து பரிசோதனை கருவிகள் கொண்டுவரப்பட்டு மாதிரிகள் சோதிக்கப்படுவதாகவும் கேரளா சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.