ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
காதலியை பார்க்க மாறுவேடத்தில் வந்து வசமாக சிக்கிக்கொண்ட காதலன்; நொறுக்கியெடுத்த பொதுமக்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சந்த் புரா. இவர் அப்பகுதியை சேர்ந்த வேறொரு மத பெண்ணை காதலித்து வந்ததாக தெரியவருகிறது.
காதல் ஜோடிகள் அவ்வப்போது நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்த நிலையில், சம்பவத்தன்று தனது காதலியை சந்திக்க சந்த் திட்டமிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன்.. நெகிழ்ச்சி சம்பவம்!
இதனையடுத்து, காதலியின் வீட்டிற்கு புர்கா அணிந்து பெண் போல வேடமிட்டு அவர் சென்ற நிலையில், வழியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்ட அவரை அப்பகுதி மக்கள் கையும்-களவுமாக பிடித்தனர்.
उत्तर प्रदेश के जिला मुरादाबाद में गर्लफ्रेंड से मिलने के लिए चांद भूरा नामक युवक बुर्का पहनकर पहुंच गया। लोगों को शक हुआ और उसे पकड़ लिया। तलाशी में एक लाइटर पिस्टल भी मिली। फिर उसकी पिटाई हुई। पुलिस को सौंप दिया गया। pic.twitter.com/lJvA8NVnnq
— Sachin Gupta (@SachinGuptaUP) September 2, 2024
நொறுக்கியெடுத்த பொதுமக்கள்
இதனால் சிக்கிக்கொண்ட அவரை நையப்புடைத்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து இளைஞனை கைது செய்த்த்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மேலும், சந்த் தன்னுடன் துப்பாக்கியையும் கொண்டு வந்திருந்துள்ளார். இதனால் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிங்க: ஜெர்மனிய பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம்; குற்றவாளி புற்றுநோயால் உயிரிழப்பு.!