இளைஞருடன் பேசுவதை தந்தை கண்டித்ததால் விரக்தி; 19 வயது இளம்பெண் தற்கொலை.!



in Uttar Pradesh Ballia 19 year Old Girl Died 


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளியா மாவட்டம், பாரா பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் குப்தா. இவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மனோஜுக்கு திருமணம் முடிந்து மனைவி, 4 மகள்கள் இருக்கின்றனர்.

இவர்களில் இரண்டாவது மகள் அதிதி குப்தா, அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு 19 வயது ஆகிறது. சம்பவத்தன்று, மனோஜின் மனைவி, வேறொரு மகளின் தேர்வுக்காக வெளியே சென்றிருந்தார். 

அப்போது, காலை சுமார் 10:30 மணியளவில், கடையில் இருந்து வீட்டுக்கு வந்த மனோஜ், மகள் அதிதியை தேடியுள்ளார். அவர் தனது அறையை உட்புறமாக தாழிட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையில், சமாதானத்துக்கு வந்த தாய் கொடூர கொலை.. மகன் வெறிச்செயல்.!

Uttar pradesh

தூக்கிட்டு தற்கொலை

நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காத நிலையில், அதனை உடைத்து அறைக்குள் சென்றபோது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அதிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் அதிதி செல்போனில் இளைஞர் ஒருவருதுடன் பழகி வந்தது தெரியவந்தது. இதனால் மகளின் செயல்பாடுகளை அறிந்த மனோஜ், அவரை கண்டித்துள்ளார். இதனால் அதிதி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: திருமணமான 6 மாதத்தில், புதுமணத்தம்பதியின் உயிரை பறித்த எமன்; கண்ணீரில் உறவினரால்.!