கணவன் - மனைவி சண்டையில், சமாதானத்துக்கு வந்த தாய் கொடூர கொலை.. மகன் வெறிச்செயல்.!



in Uttar Pradesh Mother Killed a Son 


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் மாவட்டம், கணபதிபுர் கிராமத்தில் வசித்து வருபவர் வினோத் குமார் (வயது 25). இவர் மதுபோதைக்கு அடிமையானவர் ஆவார். திருமணம் முடிந்த வினோத் குமார் தனது மனைவி, தாயுடன் வசித்து வருகிறார். 

குடிபோதைக்கு அடிமையான காரணத்தால், வினோத் எப்போதும் தனது மனைவி, தாயுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தம்பதியை வினோத்தின் தாய் நைனா தேவி (60), சமாதானம் செய்து வந்துள்ளார். 

Uttar pradesh

தாய் கொலை

இந்நிலையில், சம்பவத்தன்று நடந்த சண்டையில், வினோத் குமார் தனது மனைவியை தாக்கி இருக்கிறார். அப்போது, மருமகளுக்கு ஆதரவாக இருந்த நைனா தேவி, தனது மகனை கண்டித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: திருமணமான 6 மாதத்தில், புதுமணத்தம்பதியின் உயிரை பறித்த எமன்; கண்ணீரில் உறவினரால்.!

இதனால் ஆத்திரமடைந்த வினோத் குமார், அங்கிருந்த ஈட்டியை எடுத்து தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே நைனா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள், நைனா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: 11 வயது சிறுமி சொந்த தந்தையால் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் தகவல்.!