நடு ரோட்டில், சிக்னலில்.... இளம் பெண்ணை தாக்கி.... தலை முடியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளிய இளைஞர்... வைரலாகும் வீடியோ..!!In the middle of the road, at the signal.... the young man attacked the young woman... grabbed her hair and pushed her into the car...

டெல்லியின் மங்கல்புரி பகுதியில் உள்ள பரபரப்பான ரோட்டில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தரதரவென இழுத்து காருக்குள் அடைத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. பரபரப்பான சாலையில் சிக்னலில் ஒரு பெண்ணை அத்துமீறி தாக்கி அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து இளைஞர் ஒருவர் காருக்குள் தள்ளிய நிலையில் அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தை சிக்னலில் வெறொரு காரில் இருந்த நபர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து சமூகவலைதளத்தில் விவாதமும், அந்த வீடியோவும் வைரலானது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த காரை உபர் மூலம் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண், ரோஷ்னி பகுதியில் இருந்து விகாஷ்புரி வரை வாடகைக்கு எடுத்துள்ளனர். 

காரில் சென்று கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கும் அதில் ஒரு இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சிக்னலில் காரில் இருந்து அந்த பெண் கீழே இறங்கியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காரில் இருந்து கீழே இறங்கி நடு ரோட்டில் அந்த பெண்ணை தாக்கி அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளியது தெரியவந்தது. 

இது தொடர்பாக அந்த வாடகை காரை ஓட்டிய ஓட்டுனரிடம் காவல்துறையினர் அந்த இளம்பெண் யார், அவரை தாக்கி காருக்குள் தள்ளிய இளைஞர் யார், என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் பரபரப்பாக உள்ள ரோட்டில் இளம்பெண் ஒருவரை இளைஞர் தாக்கி காரில் தள்ளிய நிலையில், அங்கு இருந்தவர்கள் யாரும் இந்த தாக்குதலை தடுக்க முன்வரவில்லை, இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு யாரும் உதவி செய்யவில்லை, அங்கு இருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.