டெல்லியில், ராணுவத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கு; இலவச பயிற்சி பள்ளி திறப்பு..!

டெல்லியில், ராணுவத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கு; இலவச பயிற்சி பள்ளி திறப்பு..!



In Delhi, for students who want to join the army; Opening of free training school..

ஆயுதப் படையில் சேர விரும்பும் மாணவர்களுக்கான பள்ளியை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நேற்று திறந்து வைத்தார். 

புதுடெல்லி, ராணுவத்துக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரத்யேக பள்ளியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று திறந்து வைத்தார். டெல்லி நஜப்கரில் இருக்கும் ஜரோடா கலான் கிராமத்தில் இந்த பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளி, மாணவர்கள் ஆயுதப் படைக்குத் தயாராவதற்கு உதவிகரமாக இருக்கும். 
இந்த பள்ளிக்கு மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

பள்ளி திறப்புவிழா நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுடன் கலந்துகொண்டார்.மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்:- ஆயுதப் படையில் சேர விரும்பும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க முறையான இடம் இல்லை. அவர்கள் தாங்களாகவே தயார்படுத்திக் கொடனர். இப்போது நம்மிடம் இந்த பள்ளி இருக்கிறது. ஏழை எளியவர் கூட இங்கு சேர்ந்து பயிற்சி பெறலாம். பள்ளியில் சேர்க்கைக்காக சுமார் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

சுமார் 180 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில் முழுவதுமாக இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இது ஒரு குடியிருப்பு பள்ளி. ஆண், பெண் இருபாலருக்கும் விடுதி இருக்கிறது. இந்த பள்ளியில் சிறந்த வசதிகள் உள்ளன. மாணவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். இந்த பள்ளியின் மூலம் அவர்கள் ஆயுதப் படையில் சேர தயாராக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். மேலும், உலகின் தலைசிறந்த கல்வித் துறை மந்திரி மணீஷ் சிசோடியா என்று புகழாரம் சூட்டினார்.