ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
கள்ளக்காதலியுடன் கணவன் உல்லாசம்: நேரில் கண்ட மனைவி செய்த காரியத்தால் பரபரப்பான கிராமம்..!
கள்ள உறவில் இருந்த கணவனையும், அவரது கள்ள காதலியையும் அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக மனைவி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், உரிபேண்டா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பழங்குடி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஃபர்சகான் பகுதியில் உள்ள பேட்கை என்ற கிராமத்தில் வசிக்கும் பெண்ணுக்கும் தன் கணவனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதை கேள்விபட்டு கடந்த 11ஆம் தேதி அன்று ரகசியமாக அங்கு சென்று சோதனை செய்துள்ளார்.
அப்போது அவரது கணவரும், அவரது கள்ளக்காதலியும் தனிமையில் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். அதோடு நில்லாமல் அவர்களை அரை நிர்வாணமாக்கி தெருவெங்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார்.
இதனை அக்கிராமத்தினர் வேடிக்கை பார்த்ததோடு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பரப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலானதை அறிந்த கொண்டேகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவ்யாங் படேல் காவல்நிலைய அதிகாரிகளை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையில் சம்பவம் நடந்ததை உறுதிசெய்த காவல்துறையினர், கணவனையும், அவரது காதலியையும் தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக மனைவி உட்பட நால்வரையும் கைது செய்ததோடு அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.