நாடாளுமன்றத்தில் கால்பதிக்கும் இளையராஜா.! டெல்லியில் உற்சாக வரவேற்பு.!Ilayaraja takes oath as Rajya Sabha MP

விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியற்றுக்கொண்டனர். ஆனால் இளையராஜா பதவி ஏற்கவில்லை. அவர் அமெரிக்கா சென்ற காரணத்தில் பதவியேற்க முடியவில்லையென கூறப்பட்டது.

இந்த நிலையில் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.ஆக இன்று பதவி ஏற்க உள்ளார்.
இதற்காக அவர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நடைபெறவுள்ள மாநிலங்களவை கூட்டத்தின் போது இளையராஜா நியமன எம்பியாக பதவியேற்கவுள்ளார்.