26 வருஷ பழக்கத்தை மறக்க கூண்டுக்குள் தலையை வைத்து பூட்டின மனைவி! கடைசியில் நினைச்தது நடந்துருச்சாம்!



ibrahim-yucel-quit-smoking-helmet-method

இன்றைய உலகில் பலரும் புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாகிப்போவது அதிகரித்து வரும் நிலையில், மன உறுதியே மாற்றத்தை உருவாக்கும் சக்தியென நிரூபிக்கும் நிகழ்வுகள் சிலவற்றே பொதுமக்களை ஆச்சரியப்படுத்துகின்றன.

துருக்கியைச் சேர்ந்த இப்ராஹிம் யூசெல், 26 ஆண்டுகளாக தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட் பிடித்து வந்தார். பிள்ளைகளின் பிறந்த நாள், திருமண ஆண்டு விழா போல் முக்கியமான நாட்களிலும் பலமுறை நிறுத்த முயன்றும், சில நாட்களிலேயே மீண்டும் பழக்கத்திற்கு திரும்பிவிடுவார்.

இதையும் படிங்க: என்ன ஒரு புத்திசாலித்தனம்! சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர்! திடீரென தலைகீழாக நின்று அவர் செய்த வேலையை நீங்களே பாருங்க! வைரலாகும் வீடியோ...

வித்தியாசமான முடிவு

அந்த அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க அவர் உண்மையான மாற்றத்தைத் தேடி, இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட ஹெல்மெட் போன்ற ஒரு கூண்டை தலையில் பூட்டினார். அதன் சாவியை மனைவியிடம் ஒப்படைத்ததால், பசி அல்லது தாகம் ஏற்பட்டபோது மட்டுமே மனைவி கூண்டைத் திறப்பார்.

சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி வரும் புகைப்படங்கள்

இந்த முயற்சி காரணமாக சிகரெட் பிடிக்க முடியாத நிலை உருவாக, சில நாட்களில் அவர் புகைப்பழக்கத்தை முற்றிலும் விட்டுவிட்டார். 11 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகின்றன.

மன உறுதியும் புதிய சிந்தனையும் இருந்தால் எந்தக் கெட்ட பழக்கத்தையும் கடக்க முடியும் என்பதற்கு இப்ராஹிம் யூசெலின் முயற்சி உலகத்திற்கு பேருதாரணமாக திகழ்கிறது.

 

இதையும் படிங்க: எனக்கு குழந்தைகள் தேவையில்லை! அவன் தான் வேணும்! பெத்த 3 பிள்ளைகளை கதற விட்டுவிட்டு தாய் செய்த அதிர்ச்சி செயல்!