மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
19 வயது இளைஞருடன் கள்ளக்காதல்; உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 4 வயது மகளை கொன்ற கொடூர தாய்..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், குஷைகுடா பகுதியை சேர்ந்த பெண்மணி கல்யாணி. இவரின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், தனது 4 வயது மகள் தன்விதாவுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
அவருக்கு ஆறுதலாக அவ்வப்போது வீட்டிற்கு வந்து பேசி சென்ற நவீன் என்ற 19 வயது இளைஞருடன் கல்யாணிக்கு பழக்கம் ஏற்படவே, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தம்பதியின் கள்ளக்காதல் உல்லாச வாழ்க்கைக்கு 4 வயது மகள் தன்விதா தடையாக இருப்பதாக எண்ணிய தாய், தனது குழந்தையின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக கல்யாணியின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி கல்யாணியை கைது செய்தனர்.