21 இளம் பெண்களை வைத்து ஆபாச நடனம்..! திடீரென வந்த போலீசார்..! ஹைதராபாத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.!

21 இளம் பெண்களை வைத்து ஆபாச நடனம்..! திடீரென வந்த போலீசார்..! ஹைதராபாத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.!


Hyderabad dance at pup police arrested 21 girls

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் என்னும் பகுதியில் அமைந்துள்ள கிளப் ஒன்றில் இளம் பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அந்த பகுதி போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை அடுத்து கிளப்புக்கு சென்ற போலீசார் பெண்கள் ஆபாசமாக நடனமாடுவதை உறுதி செய்தனர்.

மேலும், ஆபாச நடனமாடிய 21 இளம்பெண்களை போலீசார் ஜுப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரசாத் என்பவர்தான் தங்களை அழைத்துவந்த கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றுக்காக ஆபாச நடனமாடவைத்ததாக தெரிவித்துள்ளனனர்.

Crime

மேலும், நிகழ்ச்சியை ஏற்பட்டு செய்த பிரசாத் மற்றும் அந்த கிளப்பின் உரிமையாளர் இருவரும் போலீஸ் வருவது தெரிந்து தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவாக இருக்கும் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த 21 இளம் பெண்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.