போதையில் மனைவியை தினம்தினம் சித்ரவதை செய்த கணவன்.. நண்பர்களுடன் சேர்ந்து கொடுமை செய்த பயங்கரம்..! 



husband totrure his wife daily

 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அகிலேஷ். மதுபோதை மற்றும் ஹெராயன் போன்ற போதை பொருள்களை உபயோகப்படுத்தும் பழக்கம் கொண்ட அகிலேஷ், தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவ்வப்போது போதையில் மனைவியை கொடுமைப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இதனால் அவரின் மனைவியிடம் அகிலேஷ் நண்பர்களும் அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில், அவருக்கு உடந்தையாகவும் இருந்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை கைது செய்திருக்கின்றனர். 

Husband

சமீப காலமாகவே போதைப்பொருள் கலாச்சாரம் தலைதூக்கி இருக்கும் நிலையில், ஐடி ஊழியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுகின்றன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.