இந்தியா

முதலிரவை வீடியோ எடுத்த கணவன். பின்னர் அதை வைத்து அவர் செய்த அதிர்ச்சி காரியம்!

Summary:

Husband takes video at first night wife complaint

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் வசித்துவருபவர் சியாமளா. இவர் அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் கண் மருத்துவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும், ஆந்திராவை சேர்ந்த இன்ஜினியர் நாராயண என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் தனது மனைவியுடன் தம்பதியா ஈடுபட நாராயணா அதனை அவ்வப்போது தனது மனைவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வந்துள்ளார். தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வீடியோவை பார்த்து ரசித்துவந்த வந்துள்ளார். நாராயணாவின் இந்த செயல் சியாமளவுக்கு தெரியவர அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு கேட்டுள்ளார்.

ஆனால், டெலிட் செய்யமுடியாது என நாராயணா கூற இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் சியாமளா. இதுகுறித்து சியாமளாவின் பெற்றோர் நாராயணாவிடம் சமாதானம் பேச அவர்களிடமும் தகராறு செய்துள்ளார் நாராயணா. தன்னால் விடீயோக்களை டெலிட் செய்யமுடியாது என கூற, தாங்கள் வரதட்சணையாக போட்ட 75 பவுன் நகைகளை சியாமளாவின் பெற்றோர் திருப்பி கேட்டுள்னனர்.

கொடுத்தது திருப்பி தர முடியாது எனவும், மேலும் 10 லட்சம் தரவேண்டும் எனவும், பணம் தராவிட்டால் விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் நாராயண மிரட்டியுள்ளார். இதுகுறித்து காவல் துறையில் சியாமளாவின் பெற்றோர் புகார் கொடுத்ததை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement