இந்தியா

மாமியார் வீட்டில் மரியாதை இல்லை! ஆக்ரோஷமாக இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்!

Summary:

Husband killed wife and her brother for not respect them

பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வருபவர் ஜமாய். இவரது மனைவி காஜல். இவர்களது வீட்டிற்கு அருகிலேயே ஜமாயின் மாமியார் பாப்லியின் வீடும் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜமாய் அவரது மாமியார் மற்றும் அவரது வீட்டிலிருப்பவர்கள் தனக்கு மரியாதை கொடுப்பதில்லை என  என்ற அடிக்கடி புலம்பி வந்துள்ளார். மேலும் இதுகுறித்து மனைவியுடனும் அடிக்கடி சண்டை போட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து சண்டை ஏற்பட்டுள்ளது.  இதனால் மிகுந்த கோபமடைந்த ஜமார் மனைவி காஜல் மற்றும் அவரது சகோதரர் சாஹிலை கோடாரியால் வெட்டி கொன்றுள்ளார். பின்னர் அவரே காவல்நிலையத்திற்கு சென்று அங்கு விஷமருந்திவிட்டு மயங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் ஜமாயை  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து ஜமாயின் மாமியார் பாப்லி இதுகுறித்து கூறுகையில், ஜமாய் முதலில்  காஜல் மற்றும் சாஹலை கொன்றுவிட்டு என் வீட்டு கதவை உடைக்க முயன்றான். ஆனால் அது முடியாததால் அங்கிருந்து சென்றுவிட்டான் என கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement