உணவில் உப்பு அதிகம்... சோறுபோட்ட மனைவியை கூறுபோட்ட கணவன்.. அதிரவைக்கும் சம்பவம்.. வெறிச்செயலால் பேரதிர்ச்சி.!

உணவில் உப்பு அதிகம்... சோறுபோட்ட மனைவியை கூறுபோட்ட கணவன்.. அதிரவைக்கும் சம்பவம்.. வெறிச்செயலால் பேரதிர்ச்சி.!


husband-killed-his-wife-for-extra-salt-in-food

கிச்சடியில் உப்பு அதிகமாக இருந்ததால், தனது மனைவியை கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த பேரதிர்ச்சி சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் பயந்தர் டவுன்ஷிப்பில் வசித்து வருபவர் நிலேஷ் பாக் (வயது 46). இவரது மனைவி நிர்மலா. இந்த நிலையில், நிலேஷுக்கு காலை உணவு சாப்பிடுவதற்காக நிர்மலா கிச்சடியை பரிமாறியுள்ளார். அப்போது கிச்சடியில் உப்பு அதிகமாக இருந்ததால் கோபமடைந்த நிலேஷ், மனைவியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், மனைவியை நீளமான துணியை பயன்படுத்தி கழுத்தை நெரித்து நிலேஷ் கொலை செய்துள்ளார். இதனால் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அங்கு நிர்மலா சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.maharashtraஇந்த விஷயம் தொடர்பாக அவர்கள் நவ்கர் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நிர்மலாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் (பிரிவு 302) கீழ் வழக்குப்பதிவு செய்து நிலேஷை கைது செய்த நிலையில், இந்த கொலைக்கு வேறு ஏதேனும் தூண்டுதல் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.