வெளிநாட்டில் கணவன்.. கள்ளக்காதலன்.. நாடு திரும்பிய கணவருக்கு நிகழ்ந்த கொடூரம்!

வெளிநாட்டில் கணவன்.. வீட்டில் கள்ளக்காதலன்.. நாடு திரும்பிய கணவருக்கு நிகழ்ந்த கொடூரம்!


husband-killed-behind-illegal-affair

மனைவி பிள்ளைக்காக சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்று திரும்பிய கணவருக்கு நேர்ந்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் மதுரவாடா பகுதியைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் மிருதுளா என்ற பெண்ணுக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 7 வயது நிரம்பிய மகன் ஒருவர் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு வெளிநாட்டில் பேராசிரியர் வேலை கிடைக்க மனைவி மற்றும் பிள்ளையை இங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் மிருதுளாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாமியாரை விட்டுவிட்டு தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த மிருதுளாவை தனிமையில் சந்திக்க அடிக்கடி அந்த இளைஞர் வீட்டிற்கு வந்துள்ளார். பலமுறை‌ இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் முரளி நீண்ட நாட்களுக்கு பிறகு மனைவி மற்றும்‌ பிள்ளையை பார்க்க சொந்த ஊருக்கு வந்துள்ளார். முரளி ஊருக்கு‌ வந்ததும்‌ மிருதுளாவிற்கு அந்த இளைஞரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயம் கணவரையும் மிருதுளா நெருங்கவிடவில்லை. இதனால் மணைவி மீது சந்தேகமடைந்த முரளி தன் தாயாரிடம் இதைப்பற்றி தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க மிருதுளாவை சந்திக்க முடியாமல் தவித்த அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மிருதுளாவிடம் போனில் பேசிய அந்த இளைஞர் உன் கணவரை தீர்த்துக் கட்டினால்தான் இனிமேல் நாம் சேர முடியும் என்ற யோசனையை கூறியுள்ளார். கள்ளக்காதலனின் ஆசை வார்த்தையில் மயங்கிய மிருதுளா அன்று இரவு முரளி தூங்கிக் கொண்டிருந்த பொழுது குக்கரால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

அதன்பின் அந்த இளைஞரை வரவழைத்து முரளியின் உடலை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வீசியுள்ளனர். பின்பு இரண்டு நாட்கள் கழித்து சென்று பார்த்த பொழுது துர்நாற்றம் வீசத் துவங்கியதால் நாம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் பெட்ரோலை ஊற்றி உடலை எரித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு முரளியின் தாயார் தனது மகனை பார்ப்பதற்காக ஒரு நாள் முரளியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மிருதுளா தன் மாமியாரிடம் தன் கணவரை இரண்டு நாட்களாக காணவில்லை என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து முரளியின் தாயார் மிருதுளாவின் மீது சந்தேகமடைந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் மிருதுளாவின் செல்போனை ஆய்வு செய்ததில் மிருதுளா அடிக்கடி அந்த இளைஞருக்கு போன் செய்துள்ளது அம்பலமாகியது.

அதன் பின்பு நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மிருதுளாவும் கள்ளக்காதலனும் சேர்ந்து முரளியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.