நடுரோட்டில் மனைவி மற்றும் மகளை கதற விட்டுவிட்டு, கள்ளக்காதலியுடன் எஸ்கேப்பான கணவன்! கலங்கவைக்கும் சம்பவம்!husband-escape-with-illegal-lover-in-tirupathi

திருப்பதி சின்னகாப்பு வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் வெங்கடாச்சலம் என்பவரை காதலித்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் வெங்கடாச்சலம் வேறு ஒரு பெண்ணை காதலித்து, திருமணம் செய்துகொண்டு  தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் அந்தப் பெண் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் வெங்கடாச்சலம் சரஸ்வதியின் வீட்டிற்கு வருவதையும்  நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அறிந்த சரஸ்வதி தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கதறியவாறு திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தநிலையில் சமீபத்தில் வெங்கடாசலம் தனது காதலியுடன் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது அவர் தான் தனது காதலியுடனே சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார்.

Tirupathi

அதனைத்தொடர்ந்து விசாரணை முடிந்து வெளியே வந்த வெங்கடாசலம் காதலியுடன் பைக்கில் ஏறி அங்கிருந்து செல்ல முயன்ற நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய சரஸ்வதி அவரிடம் கெஞ்சி கதறியுள்ளார். மேலும் உடனிருந்த 8 வயது மகளும் அப்பா அப்பா என கதறி அழுதுள்ளார். ஆனால் அதனை சிறிதும் பொருட்படுத்தாத வெங்கடாசலம் விட்டால் போதும் என தன்னுடைய காதலியுடன் அங்கிருந்து வேகமாக புறப்பட்டார்.

Tirupathi

 இந்நிலையில் அவர்களது பைக்கின் பின்னாலேயே ஓடி சென்ற சரஸ்வதி செல்போனை அவர்கள் மீது தூக்கி வீசி, நடுரோட்டில் அமர்ந்து கதறி அழுதுள்ளார். மேலும் அவரது மகளும் அருகில் அமர்ந்து அவர் வேண்டாம் என்பது போல பேசியுள்ளார்.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை ஆவேசபடுத்தியுள்ளது.