அடுத்தவரின் பேஸ்புக் பக்கத்தில் மனைவியின் புகைப்படம்! அதிர்ச்சியடைந்த கணவன்! பரிதாபமாக பிரிந்த 4 உயிர்கள்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

அடுத்தவரின் பேஸ்புக் பக்கத்தில் மனைவியின் புகைப்படம்! அதிர்ச்சியடைந்த கணவன்! பரிதாபமாக பிரிந்த 4 உயிர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் நாலசோப்ராவில் உள்ள பபுல் பாடாவை சேர்ந்தவர் கைலாஷ். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 1 மாதத்திற்கு முன்பு கைலாஷின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தான் பிள்ளைகள் 3 பேருடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் தனது மனைவியின் புகைப்படம் வேறொரு நபரின் முகநூல் கணக்கில் இருப்பதை பார்த்துள்ளார். இதனைப்பார்த்த கைலாஷ் மனவேதனையுடனும், அதிர்ச்சியுடனும் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பூட்டிய வீட்டுக்குள் கைலாஷ் தனது குழந்தைகள் 3 பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, அதே கத்தியால் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில், கைலாஷின் தந்தை சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகன் மற்றும் பேரக்குழந்தைகள் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த கைலாஷ் மற்றும் பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி பிரிந்து சென்றது மட்டும் அல்லாமல் அவரது புகைப்படம் அடுத்தவரின் முகநூலில் இருந்ததால் விரக்தி அடைந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo