தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மனைவி செய்த காரியத்தால், வீட்டிலிருந்து லட்சக்கணக்கில் கைப்பற்றப்பட்ட பணம்! அவமானத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு!
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. தாசில்தாராக உள்ள இவர் மீது ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சுஜாதாவின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 30 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சுஜாதா சரியான பதில் எதுவும் அளிக்கவில்லை. அதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அவரது கணவருக்கும் சம்பந்தமிருக்கும் என எண்ணிய போலீசார் அவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் மிகுந்த அவமானம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்த சுஜாதாவின் கணவர் விஜயகுமார் சமீபத்தில் ஹைதராபாத்தில் காந்திநகரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று இதுகுறித்து கூறி வருத்தப்பட்டுள்ளார்.பின்னர் அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த விஜயகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.