32 வயது..! பலவருடம் குழந்தை இல்லை..! இறப்பதற்கு முன் கணவன் செய்த டார்ச்சர்..! காப்பற்ற துடிக்கும் செல்ல நாய்..! வைரல் வீடியோ.! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா வீடியோ

32 வயது..! பலவருடம் குழந்தை இல்லை..! இறப்பதற்கு முன் கணவன் செய்த டார்ச்சர்..! காப்பற்ற துடிக்கும் செல்ல நாய்..! வைரல் வீடியோ.!

திருமணம் முடிந்து பலவருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் கணவன் செய்த கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்டதும், அவர் இறப்பதற்கு முன் கணவன் செய்த கொடுமைகள் சிசிடிவி காட்சிகளாக வெளியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளரான லாவண்யா (வயது 32) என்ற பெண்ணும், விமானியான வெங்கடேஷ் என்பவரும் காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் லாவண்யாவின் கணவரும், கணவனின் குடும்பத்தாரும் லாவண்யாவை கொடுமை படுத்தியதாக தெரிகிறது.

உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த லாவண்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் லாவண்யா பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தன்னுடைய கணவர் செய்யும் சித்திரவதைகளை தன்னால் தாங்கிக்கொள்ள இயலாது ஆகையால் இத்துடன் என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறி கதறி அழுதிருக்கிறார்.

வீடியோவை பார்த்த லாவண்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து அவரை காப்பாற்றுவதற்குள் லாவண்யா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் இருந்த பதிவுகளை லாவண்யாவின் பெற்றோர் பார்த்துள்ளனர். அதில்,லாவண்யாவை அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் இடம்பெறுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo