ஆபாச நடிகைகள் போல் உடை அணிய வற்புறுத்திய கணவர்.! வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறை.!husband-arrested-for-harassing-his-wife-by-forcing-her

இந்திய தலைநகர் டெல்லியில் மனைவியை ஆபாச படம் பார்க்க வற்புறுத்தி அதில் வருவது போன்று செய்வதற்கு கட்டாயப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த 30 வயது பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது கணவர் ஆபாச படங்களுக்கு அடிமையானவர் என்றும் தன்னையும் அந்த படங்களை பார்க்க தொடர்ந்து வற்புறுத்தி  வந்ததாகவும் அதில் வரும் நடிகைகளை போன்று ஆடை அணிய சொல்லிடும் பொருத்தியதாக தனது புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

India

தங்களுக்கு 2020 ஆம் ஆண்டு திருமணம் முடிந்ததாக புகாரில் தெரிவித்திருக்கும் அந்தப் பெண் தன்னுடைய கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை வரதட்சனை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகவும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

India

இதனைத் தொடர்ந்து நடவடிக்கைகளில் இறங்கிய காவல்துறை இந்தப் பெண்ணின் கணவரின் மீது  இந்திய பீனல் கோட் செக்ஷன் 498 எ, 406, 377 மற்றும் 84 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும்  சாட்சியங்கள் மற்றும் தகவல்கள்  அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்து இருக்கிறது.