வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
படுக்கை அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்திய கணவர்-ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்!
இந்தியாவின் திரிபுரா மாநிலம் சாதுடில்லா என்ற கிராமத்தில் குடியிருக்கும் ரத்னா-சந்தன் காந்தி தம்பதியினர். திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது ரத்னா மகளிர் ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனது கணவர் படுக்கை அறையில் முக்கியமாக தான் படிக்கும் இடத்தை குறிவைத்து கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
அது மட்டுமின்றி சந்தன் காந்தி குடும்பத்தினர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ரத்னாவின் கணவரிடம் விசாரணை மேற்கொண்டது மகளிர் ஆணையம் போலீஸ்.
காந்தி விசாரணையில் கூறியதாவது, மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததை அடுத்தே தாம் கமெரா பொருத்தியதாகவும், வரதட்சினை கேட்டு துன்புறுத்தியதாக கூறுவது பொய் எனவும் அவர் சாதித்துள்ளார்.
இருவரின் வாதங்களை பதிவு செய்துள்ள மகளிர் ஆணையம், தற்போது 45 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளனர். அதனுள் இருவரும் தங்களின் பிரச்னைகளை பேசி தீர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.