ஓரினச் சேர்க்கையால் ஏற்பட்ட விபரீதம்.. 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை!

ஓரினச் சேர்க்கையால் ஏற்பட்ட விபரீதம்.. 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை!


Homosex mother killed son in West Bengal

மேற்குவங்க மாநிலத்தில் 8 வயது சிறுவனை தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 16ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டான். இந்த சிறுவனின் மரணம் மர்மமாக இருந்து வந்த நிலையில், உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Homosex

மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சாந்தா ஷர்மா. இவருக்கு ஸ்ரேயாஸ் என்ற 8 வயது மகன் உள்ளான்.

இதில், சாந்தா சர்மா தனது தோழியான இஸ்ரத் பர்வீன் என்ற பெண்ணுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் சாந்தா ஷர்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தோழியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

Homosex

இந்த நிலையில் சம்பவத்தன்று சாந்தா சர்மா, பர்வினுடன் உல்லாசமாக இருப்பதை அவரது மகன் எதிர்பாராத விதமாக பார்த்து விட்டார். இதனை தனது மகன் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விடுவான் என்ற பயத்தில் சாந்தா சர்மாவும், பர்வினும் சேர்ந்து சிறுவனை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.