ஜட்கா இறைச்சியை மட்டுமே இந்துக்கள் சாப்பிட வேண்டும்.! அமைச்சர் அறிவுரை!! அப்படின்னா என்னன்னு தெரியுமா??

ஜட்கா இறைச்சியை மட்டுமே இந்துக்கள் சாப்பிட வேண்டும்.! அமைச்சர் அறிவுரை!! அப்படின்னா என்னன்னு தெரியுமா??


hindus eat onlyjhatka meat minisiter giriraj singh advise

அண்மையில் பிகாரின் காளி கோயிலில் விலங்குகளை பலியிடக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு பலரும்  ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரின் வெகுசாராய் எம்பியும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

 அவர் கூறியதாவது, விலங்குகளை நேசிப்பதாக கூறிவரும் சிலர் இந்து கோயில்களில் விலங்குகளை பலியிட கூடாது என வாதம் செய்து வருகின்றனர். அவர்களால் ஏன் முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையின் போது விலங்குகளை பலியிடக் கூடாது என குரல் எழுப்ப முடியவில்லை? முஸ்லிம்கள் அவர்களது மத வழக்கப்படி ஹலால் இறைச்சியை மட்டும் உண்ணுவர். அவ்வாறு இந்துக்கள் ஜட்கா இறைச்சியை மட்டும் சாப்பிட வேண்டும்.

அதாவது இந்து கோயில்களில் பலி கொடுக்கும்போது அந்த விலங்கை ஒரே வெட்டில் கொன்று விட வேண்டும். ஓங்கி வெட்டும்போது தண்டுவடம் அறுபடுவது போல் வெட்டுவதால் உடனடியாக அந்த விலங்கிற்கு வலி தெரிவதற்கு முன்பே மரணம் ஏற்பட்டு விடுகிறது. இந்த முறைக்கு ஜட்கா என பெயர் இந்த ஜட்கா இறைச்சியை மட்டுமே இந்துக்கள் சாப்பிட வேண்டும். உலகில் பல மதங்கள் உள்ளன அதில் இந்து மதமே சிறந்தது என்று கூறியுள்ளார்.