தீவிரமடைந்த பருவமழை., மூன்று பேர் உயிரிழப்பு.!! தத்தளிக்கும் கேரளா..!

தீவிரமடைந்த பருவமழை., மூன்று பேர் உயிரிழப்பு.!! தத்தளிக்கும் கேரளா..!



Heavy rain in kerala

டந்த சில நாட்களாக கேரளாவில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு ஆரஞ் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று கேரளாவில் ஐந்து மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்றும் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

அதிலும், குறிப்பாக மலையோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வரும் காரணத்தினால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவால் அந்த மாநிலங்களில் இருக்கும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் உள்ளது.

                                           kerala flood

மேலும், பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சரிந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக, சில வீடுகளும் இடிந்துள்ளன. மழை பாதிப்பிற்கு கேரளாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலத்தில் கனமழையில், பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை கடக்க முடியாமல் ரப்பர் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்தவர்கள் இரு கரைக்கும் இடையே கயிறு ஒன்றை கட்டி தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.