ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! பிகாரில் இடியுடன் கூடிய கனமழை! 22 பேர் பலி!

heavy rain in bihar 22 people killed


heavy rain in bihar 22 people killed

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கனமழை காரணமாக அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த இடியுடன் கூடிய மழைக்கு 22 பேர் பலியாகியுள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் நாங்கள் ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Bihar

இதற்குமுன்னர், பிகார் அரசு மழை வெள்ளத்தின் காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் இருப்பதால், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு 22 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ள தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.