மாணவியை திருமணம் செய்த தலைமை ஆசிரியருக்கு, நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு!.

மாணவியை திருமணம் செய்த தலைமை ஆசிரியருக்கு, நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு!.



head master married school girl

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். 65 வயதான இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்ட நிலையில் பிள்ளைகளுடன் வசித்துவந்துள்ளார்.

ஜெய்கிருஷ்ணன் ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறி வந்துள்ளார். மேலும் அந்த மாணவிக்கு டியூசனும் எடுத்துவந்துள்ளார்.

                              head master

இந்த நிலையில் ஜெய்கிருஷ்ணனுக்கும், மாணவிக்கும் இடையே  ஈர்ப்பு உருவானது. ஆசிரியர், மாணவி உறவு என்பதால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் இருவரின் பழக்கம் காதலாக மாரி வீட்டுக்கு தெரியாமல் இருவரும் வெளியே சுற்ற ஆரம்பித்தனர்.

மாணவி மகத் திடீரென காணாததால் அவரின் வீட்டார்கள் பெண்ணை தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் இருவரும் ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது அவர்கள் ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் காவல்துறையினரிடம் அவர்கள் சிக்கினர்.

போலீசார் இருவரிடமும் விசாரித்தபோது நானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகத் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள் என கதறி அழுது இருக்கிறார் மகத்.

                                      head master

அவர்களின் வேண்டுகோளை போலீசார் ஏற்றுக்கொள்ள மறுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட், திருமணத்திற்குரிய பதிவு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கூறினார். ஆனால் அதற்கு மகத் பதில் ஏதும் சொல்லாமல் அமைதி காத்தார்.

மாணவி மகத் நலன் கருதி அவரை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும். அல்லது அவர் செல்ல மறுத்தால் விடுதியில் தங்க வைக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஆசிரியர் செய்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. மகள் வயதுடைய ஒருவரை திருமணம் செய்ய முடியுமா, மாணவியை மனைவியாக ஏற்று கொள்ளலாமா? மாணவியை விருப்பப்பட்டு வந்தாலும், அவருக்கு புத்திமத்தி சொல்லி இருக்கவேண்டும் என கூறி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். இந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.