திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அதிரடி அறிவிப்பை அறிவித்த கேரள அரசு.!

திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அதிரடி அறிவிப்பை அறிவித்த கேரள அரசு.!



happy news for kerala theatres owners

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் நாட்டின் பல மாநிலங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கேரளாவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அதற்கு சாத்தியமில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், வினியோகஸ்தர்கள் உள்பட அனைத்து திரைப்பட சங்கத்தினரும் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், மின்சார கட்டணம் குறைப்பு, கேளிக்கை வரி ரத்து உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்தநிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது.

KERALA

இந்த கூட்டத்தில், கேரளாவில் திரைப்பட துறையினரின் கோரிக்கையை ஏற்று மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்திற்கு திரையரங்குகளில் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகள் கடந்த 10 மாத காலமாக மூடப்பட்டு உள்ளது. எனவே இந்த 10 மாத காலத்திற்கான குறைந்த பட்ச கட்டாய மின்சார கட்டணத்தில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாயத்துகளுக்‍கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை செலுத்த கால அவகாசம் அளிக்கப்படுகிறது. உரிமம் புதுப்பித்தல் மற்றும் அவை தொடர்பான காலாவதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கேரளா அரசின் இந்த அறிவிப்பால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.