பணியில் இருந்து நீக்கிய பாஸை வச்சி செய்த முன்னாள் பணியாளர்கள்; ஹனி தரப்பில் மயக்கி மன்மத லீலை.!Gujarat Vadodara Boss Abused By Ex Employees in Honey Trap Method 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதியை சேர்ந்த நபர், முன்னணி ஐடி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் ஊழியர்கள் இருவரின் ஹனிட்ராப்பில் சிக்கி மானத்தை இழந்துள்ளார்.

முன்னாள் ஊழியர்கள் இருவர் ஜோடியாக சேர்ந்து தங்களின் பாஸை பழிவாங்கும் பொருட்டு இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கை தொடங்கியுள்ளனர். பின் அதனை வைத்து சம்பந்தப்பட்ட நபரிடம் பேசியுள்ளனர். 

ஆசையை தூண்டும் விதமாக பேசிய கேடி ஜோடி, தங்களின் வலையில் விழவைத்து அவரை ஆபாச படங்கள் எடுத்து வைத்துக்கொண்டுள்ளது. இந்த போட்டோவை மனைவிக்கு அனுப்பி, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டி சர்ச்சை செயல் நடந்துள்ளது.

அவரின் வீட்டு முகவரிக்கும் ஆபாச படங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. ஒருகட்டத்தில் மனமுடைந்துபோன நபர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து ப்ரீத்தி மற்றும் அனீஸ் ஆகியோரின் செயல் அம்பலமாகியுள்ளது.