5 வயது குழந்தையை சப்பாத்திக்கட்டையால் அடித்தே கொலை செய்த காதலன்: நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி செயல்.!Gujarat Jamnagar 5 Aged Baby Killed by Mothers Male Friend  

 

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர், திருப்பதி பார்க் பகுதியை சேர்ந்தவர் சாவ்ரி பன்சூரியா. இவரின் முதல் கணவர் ரவி. தம்பதிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இருவருக்கும் 5 வயதுடைய குழந்தை இருக்கும் நிலையில், 3 ஆண்டுகள் கடந்ததும் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை விவாகரத்து செய்து பிரிந்த சாவ்ரி, தனது குழந்தையுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 

அச்சமயம், சாவ்ரிக்கு தனியார் வங்கியில் வேலைபார்க்கும் விரேன் ராமவாத் (வயது 25) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். 

சாவ்ரியை ஏற்றுக்கொண்ட விரேன், அவரின் குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தையை முதல் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்தால், நாம் திருமணம் செய்து வாழலாம் என கூறியுள்ளார். 

இதற்கு சாவ்ரி மறுப்பு தெரிவித்ததால், முதலில் அமைதியாக இருப்பது போல நடித்த விரேன், பின்னாளில் தனது செயல்பாடுகளை காண்பித்துள்ளார். கடந்த நவம்பர் 22ம் தேதி சாவ்ரி தனது 5 வயது குழந்தை நிதி பன்சூரியாவுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். 

அச்சமயம், தம்பதிகளிடையே வாக்குவாதம் நடைபெற, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விரேன், சப்பாத்தி கட்டையை எடுத்து குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், சாவ்ரியையும் வயிற்றில் கடுமையாக தாக்கி தப்பிச்சென்றுள்ளார்.

5 வயது பச்சிளம் குழந்தை உயிருக்கு துடிதுடிக்க, சாவ்ரி தனது முன்னாள் கணவருக்கு தொடர்புகொண்டு கண்ணீருடன் விபரத்தை விவரித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன ரவி, தனது மனைவியின் வீட்டிற்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தார்.

காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நவம்பர் 25ம் தேதி குழந்தை பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சாவ்ரியின் ஆண் நண்பரான விரேனை கைது செய்தனர்.