குடும்பம் நடத்த வராத மனைவியுடன் தற்கொலை.. ஜெலட்டின் குச்சியை உடலில் கட்டி பகீர் சம்பவம்.!

குடும்பம் நடத்த வராத மனைவியுடன் தற்கொலை.. ஜெலட்டின் குச்சியை உடலில் கட்டி பகீர் சம்பவம்.!


Gujarat Husband Man Bomb death with Wife Like Suicide Bomber

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மாவட்டம், மெகராஜ் நகரை சேர்ந்தவர் லாலாபாகி (வயது 45). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஷாராபேன் (வயது 43). இவர்கள் இருவருக்கும் கடந்த 20 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்னதாக ஷாராபேன் கணவருடன் சண்டையிட்டு பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். லாலாபாகிக்கு மனம் கேட்காத நிலையில், மாமனாரின் வீட்டிற்கு சென்ற கணவர் மனைவியை தன்னுடன் வாழ அழைத்துள்ளார். அதற்கு ஷாராபேன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஷாராபெனின் குடும்பத்தார்கள் லாலாபாகியை தாக்கி அவதூறாக பேசியுள்ளனர். 

gujarat

இதனால் ஆத்திரமடைந்த லாலாபாகி, மனைவியை கொலை செய்ய மனித வெடிகுண்டாக மாற திட்டம் தீட்டியுள்ளார். தனது உடலில் 2 ஜெலட்டின் குச்சியை சுற்றி கட்டிக்கொண்டு, பேட்டரி மூலமாக இணைப்பை கொடுத்தவர், குண்டு வெளியே தெரியாமல் இருக்க சட்டையை அணிந்துள்ளார். மனைவியின் வீட்டிற்கு சென்றவர் குடும்ப நடந்த அழைப்பு விடுக்க, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற லாலாபாகி, மனைவி ஷாராபேனை கட்டிப்பிடித்து ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க செய்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். வெடிச்சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.