ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய குஜராத் நீதிமன்றம்..!!Gujarat court sentences Rahul Gandhi to two years in prison..

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக அவ்வாறு பேசியதாகவும் பாஜக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பெயரை வைத்து சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என்று குஜராத் சூரத் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் மாவட்ட கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி, தனது வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையை தடுத்து, தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் திட்டமிட்டு உள்ளதாகவும், இல்லையென்றால் வழக்கை தள்ளுபடி செய்ய காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.