காதலனுடன் குஜாலாக இருக்க பெற்றோருக்குத் தினமும் இரவுவில்....! 8-ம் வகுப்பு மாணவியின் பகீர் செயல்! உஷாராகி தந்தை செய்த செயல்! கையும் களவுமாகப் பிடிப்பட்ட மகள்!



gorakhpur-schoolgirl-drugged-family-to-meet-lover

குடும்ப நம்பிக்கையைச் சிதைக்கும் அதிர்ச்சி சம்பவமாக, உத்தரபிரதேசம் கோரக்பூரில் 8ம் வகுப்பு மாணவி ஒருவர் காதலனைச் சந்திக்க தனது பெற்றோர் மற்றும் பாட்டிக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து வழங்கப்பட்ட தூக்க மாத்திரைகள்

குஜராத்தில் பெயிண்ட் வேலை செய்து வரும் 22 வயது இளைஞரே அந்த மாணவியின் காதலன் என தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் மாணவிக்கு தொடர்ந்து தூக்க மாத்திரைகளை வழங்கி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரவு நேரத்தில் ரகசிய சந்திப்பு

கடந்த இரண்டு மாதங்களாக, இரவு உணவில் 4 முதல் 5 மாத்திரைகளை அரைத்து கலந்து கொடுத்துவிட்டு, குடும்பத்தினர் மயக்கத்தில் உறங்கியதும் மாணவி ரகசியமாக காதலனின் வீட்டிற்கு சென்று விடியற்காலையில் வீடு திரும்புவது வழக்கமாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்! 10 ஆம் வகுப்பு சிறுமியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்ட 52 வயது நபர்! 16 வயது சிறுவன் வீடியோ எடுத்து மிரட்டி.... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி!

தந்தையின் சந்தேகம் – கையும் களவுமாக பிடிப்பு

மகளின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்ட தந்தை, ஒருநாள் இரவு உணவு சாப்பிடாமல் தூங்குவது போல நடித்துக் கண்காணித்துள்ளார். மகள் வீட்டை விட்டு வெளியேறியதும் அவரை பின்தொடர்ந்து சென்று காதலனின் வீட்டில் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

போக்சோ வழக்கு பதிவு

இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மாணவி சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

மருத்துவர்களின் எச்சரிக்கை

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை உட்கொள்வது மூளை பாதிப்பு மற்றும் கோமா நிலைக்குக் கூட இட்டுச் செல்லும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம், இளம் வயதில் தவறான பழக்கங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகளை மீண்டும் நினைவூட்டுவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகளின் நடத்தை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய இளையர்.... மருத்துவ சோதனையில் வெளிவந்த உண்மை! தேனியில் பரபரப்பு..!!!