கடவுள் ராமர் இந்தியர் இல்லை..! அவர் ஒரு நேபாளி..! அயோத்தியும் எங்க நாட்டுல தான் இருக்கு..! இந்தியாவை வம்பிழுக்கும் நேபாள பிரதமர்.!

கடவுள் ராமர் இந்தியர் இல்லை..! அவர் ஒரு நேபாளி..! அயோத்தியும் எங்க நாட்டுல தான் இருக்கு..! இந்தியாவை வம்பிழுக்கும் நேபாள பிரதமர்.!


god-ramar-is-nepali-not-an-indian-says-nepal-pm

ராமர் உண்மையில் இந்தியர் கிடையாது என்றும், அவர் பிறந்து நேபாளில்தான் எனவும், ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தியும் நேபாளில்தான் உள்ளது என நேபாள பிரதமர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக எல்லை பிரச்சனை, இந்திய எல்லையை தங்கள் நாட்டு வரைபடத்துடன் இணைத்தது, தூர்தர்ஷன் தவிர்த்து பிற சேனல்கள் ஒளிபரப்புக்கு தடை விதித்தது இப்படி நேபாளம் பல்வேறு வழிகளிலும் இந்தியாவை சீண்டி வருகிறது.

God Ramar

இதுஒருபுரம் இருக்க, புதிதாக ஒரு பிரச்னையை கிளப்பியுள்ளார் நேபாள பிரதமர் கே.பி.சர்மா. அதாவது, ராமர் இந்தியர் கிடையாது, அவர் ஒரு நேபாளி, உண்மையான அயோத்யா இந்தியாவில் இல்லை, அது நேபாளத்தில் உள்ளது என கூறியுள்ளார்.

சீனாவுடன் சேர்ந்துகொண்டு, சீனா கொடுக்கும் தைரியத்தில் நேபாள பிரதமர், இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை பேசிவருவதாக கூறப்படுகிறது.