நீ யாருக்கும் கிடைக்ககூடாது! திருமணத்திற்கு மறுத்த இளைஞன்!! விரட்டி விரட்டி இளம்பெண் செய்த பகீர் காரியம்!!

நீ யாருக்கும் கிடைக்ககூடாது! திருமணத்திற்கு மறுத்த இளைஞன்!! விரட்டி விரட்டி இளம்பெண் செய்த பகீர் காரியம்!!


girl-throw-acid-for-reject-marriage-proposal

அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் சிங். 25 நிறைந்த அவர் பெற்றோர் இல்லாத நிலையில் சோனிபட்டில் தனது அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன்பு அஞ்சலி என்ற 23 வயது பெண்ணுடன்  பழக்கம் ஏற்பட்டது. அஞ்சலி தினமும் ஷியாமுடன் போனில் பேசி வந்துள்ளார். 

இந்த நிலையில் திடீரென ஒரு நாள் அந்த பெண் தனது தாயுடன் ஷியாமின் அத்தை வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷ்யாம் கால அவகாசம் கேட்டுள்ளார். இதற்கிடையில் அந்த பெண் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

acid

அதனால் ஷ்யாமின் அத்தை அஞ்சலியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஷியாமும் அஞ்சலியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர் அடிக்கடி போன் செய்து ஷ்யாமை தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் எனக்கு கிடைக்காத உன்னை யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் அண்மையில் வீட்டிலிருந்து வெளியே வந்த ஷ்யாம் மீது அப்பெண் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

இதில் உடல் முழுவதும் எரிந்து கதறிய நிலையில் ஷியாம் ஓடியுள்ளார். ஆனாலும் அப்பெண் விரட்டி விரட்டி அவர் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஷியாமின் அத்தை அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.