"எனக்கே டிமிக்கி கொடுக்க பாக்குறியா" - காதலன் மீது 5 லிட்டர் ஆசிட் ஊற்றிய ஒருதலைகாதலி.. உடல்வெந்து துடிதுடித்து அலறிய பயங்கரம்..!! 

"எனக்கே டிமிக்கி கொடுக்க பாக்குறியா" - காதலன் மீது 5 லிட்டர் ஆசிட் ஊற்றிய ஒருதலைகாதலி.. உடல்வெந்து துடிதுடித்து அலறிய பயங்கரம்..!! 


girl poured five litres acid on boyfriend

திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன் மீது காதலி 5 லிட்டர் ஆசிட்டை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பகதுர்கர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் (வயது 25). இவருக்கு பெற்றோர் இல்லாததால் அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், செல்போன் எண்ணை பகிர்ந்துகொண்டு செல்போனில் பேசி வந்துள்ளனர். 

இதற்கிடையில் ஷியாம் தன்னை காதலிப்பதாக நினைத்த அஞ்சலி, திடீரென்று ஒரு நாள் தனது பெற்றோரை அழைத்து சென்று ஷியாமை மாப்பிள்ளை கேட்டிருக்கிறார். அப்போது ஷியாமிடம் அவரது அத்தை இது குறித்து பேச, தனக்கு எதுவுமே தெரியாது. தான் அஞ்சலியை காதலிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் ஷியாமும், அவரது அத்தையும் அஞ்சலி குறித்து விசாரிக்க தொடங்கியபோது, அஞ்சலிக்கு முன்பே திருமணமானதும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. 

haryana

இதனால் அஞ்சலியை திருமணம் செய்ய ஷியாமுக்கும், அவரது அத்தைக்கும் துளியும்  விருப்பமில்லை. சம்பவத்தன்று பால் வாங்குவதற்காக ஷியாம் கடைக்கு சென்றபோது, அவரை வழிமறித்து மீண்டும் தகராறு செய்த அஞ்சலி 'தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்'. அதற்கு அவர் மறுக்கவே, தான் முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்துச்சென்றபடி 5 லிட்டர் கேனில் இருந்த ஆசிட்டை ஷியாம் மீது ஊற்றி இருக்கிறார். 

இதில் அவரின் கை, கால் உடல் முழுவதும் வெந்து துடிதுடித்து அலறவே, அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், ஷியாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், காவல்துறையினர் அஞ்சலியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைகாதலால் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.