சினிமா

உங்கள் இறுதிவலியை நானும் உணரவேண்டும்! சீரழித்து எரித்து கொல்லப்பட்ட மருத்துவருக்காக இளம்பெண் செய்த நெகிழ்ச்சி காரியம்!

Summary:

girl lighting candle on her hand for hydrabad doctor issue

கடந்த வாரம் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர்  டூ வீலர் பஞ்சரான நிலையில், லாரி டிரைவர்களால் வலுக்கட்டாயமாக தூக்கி செல்லப்பட்டு, வாயில் மதுவை ஊற்றி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் அதனை தொடர்ந்து கொடூரமாக எரித்தும்  கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, நவீன் மற்றும் சிறுவர்களான ஷிவா, சின்ன கேசவலு  ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தும், மேலும் பல்வேறு இடங்களில் இறந்த கால்நடை மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தால் மனமுடைந்து போன யானா மிர்சாந்தினி என்ற இளம்பெண் கால்நடை மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  அன்புள்ள பிரியங்கா ரெட்டி, இந்த மெழுகுவார்த்தியை எந்த தட்டிலும் வைக்காமல் முழுவதும் எனது கைகளிலேயே வைத்து ஏந்தினேன். அந்த கொடூர அரக்கர்கள் உங்களை வன்கொடுமை செய்து எரித்தபோது நீங்கள் அனுபவித்த வலியை நான் உணர வேண்டும் என்பதற்காகே இவ்வாறு செய்தேன், உங்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தால் மொத்த நாடும் சிந்தும் கண்ணீர்க்கு இந்தமுறையாவது விடை கிடைக்கும் என நம்புகிறேன் என வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement