நடிக்க வாய்ப்பு தருவதாக இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. பின்னணியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
சினிமா மீது மோகம் கொண்ட இளம்பெண்கள் குறித்து பாலியல் அரக்க கும்பலால் திட்டமிடப்பட்டு வேட்டையாடப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டை சேர்ந்த 24 வயது இளம்பெண், சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் அதற்கான வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனக்கு தெரிந்தநபர்களிடம் திரைத்துறையில் வாய்ப்பு தேடி பயணிக்க, அப்போது பெண் ஒருவர் அறிமுகமாகி சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.
பெண்மணி தனது ஆண் தோழரை அறிமுகப்படுத்தி, அவருக்கு திரைத்துறையில் பலரை தெரியும். அவர் உங்களுக்கு உதவி செய்வார் என கூறியுள்ளார். இதனை பெண்மணியும் நம்பியுள்ளார்.
இதற்கிடையே, பெண்மணிக்கு நடிப்பு சம்பந்தமான அழைப்பு கிடைக்கவே, அவர் தன்னை நடிக்க அழைக்கிறார்கள் என நம்பி அங்கு சென்றுள்ளார். அங்கு சில ஆண்கள் இருக்க, அவர்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அவர்கள் தனது நடிப்பை பார்க்க வந்திருப்பதாக பெண்மணி எண்ணிய நிலையில், அவர்கள் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் பெண்மணி அதற்கு மறுக்க, அவரிடம் சினிமாவில் நடிக்க ஒத்துழைப்பு வேண்டும் என கூட்டாக சேர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு பின்னர் வீடு திரும்பிய பெண்மணி, தனக்கு நேர்ந்த நிலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னணியில் சீரியல் நடிகை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணை நடந்து வருகிறது.