கொரோனா டெஸ்ட் எடுத்தது ஒரு குத்தமா?? சிறுமி செய்யும் காரியத்தை பாருங்க!! மனசுவிட்டு சிரிப்பீங்க!!

கொரோனா டெஸ்ட் எடுத்தது ஒரு குத்தமா?? சிறுமி செய்யும் காரியத்தை பாருங்க!! மனசுவிட்டு சிரிப்பீங்க!!


Girl fun video when take corona test

கொரோனா டெஸ்ட் எடுக்க வந்தவரிடம் சிறுமி ஒருவர் செய்யும் சேட்டை தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவில் உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொரோனா பாதிப்பும், அதன் கோரமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும், பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் உலகமே கொரோனா பீதியில் உறைந்துள்ளது. தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் மனதை மேலும் சோகமடைய செய்கிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை எடுக்க வந்த மருத்துவர் ஒருவரிடம் சிறுமி செய்யும் சேட்டையும், கடைசியில் அவர் ஆடும் நடனமும் மனதில் எவ்வளவு சோகம் இருந்தாலும் அதனை மறந்து நம்மை சிரிக்க வைப்பதாக உள்ளது.

குறிப்பிட்ட வீடியோவில், மருத்துவர் ஒருவர் சிறுமிக்கு கொரோனா பரிசோதனை செய்ய, சிறுமியின் மூக்கில் குச்சியை விட முயற்சிக்கிறார். ஆனால் அந்த சிறுமி அடம் பிடிக்கிறார். மருத்துவர் எப்படி முயன்றும் நடக்கவில்லை. இறுதியில் ஒரு வழியாக மருத்துவர் அந்த குழந்தை சற்று அசந்த நேரம் பார்த்து குச்சியை மூக்கில் விட்டு எடுத்தார்.

உடனே அந்த சிறுமி அங்கிருந்து எழுந்து மகிழ்ச்சியில் நடனமாடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.