கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு செல்லும்வழியில், வாந்தி வருவதாக கூறிய புதுப்பெண்! அடுத்தகணமே குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோப்பூர் அருகே அல்லாபூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ராம்பிரசாத். இவரது மகள் அஞ்சு சைனி. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து மஞ்சு சைனி கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் காரில் புகுந்த வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது கார் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் எல்லையில் அமைந்துள்ள பாலி பாலத்தை அடைந்தபோது, சைனி எனக்கு உடல்நிலை சரியில்லாதது போல இருப்பதாகவும், வாந்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஓட்டுனர் காரை நிறுத்திய நிலையில், அவசர அவசரமாக இறங்கிய சைனி சற்றும் எதிர்பாராத விதமாக பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்துள்ளார். இந்நிலையில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த யாருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் அவர்களால் சைனியை காப்பாற்ற முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீவிர தேடுதலுக்கு பிறகு சைனியின் சடலத்தை கைப்பற்றினர். மேலும் சைனியின் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனாலும், அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.