இளம் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய ஆதார் கார்ட்! ஒரு அதிர்ச்சி தகவல்!

இளம் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய ஆதார் கார்ட்! ஒரு அதிர்ச்சி தகவல்!



girl-commit-suicide-for-aadhar-card

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும், பயனாளர்களை ஆதார் அட்டை தரக்கூறி கட்டாயப்படுத்த கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் பல இடங்களில் இன்னும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற சூழலே உள்ளது.

அந்த வகையில் ஆந்திராவில் அரசு மருத்துவமனை ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார் மாலதி என்ற பெண். இவர் பணியிலிருந்தபோது ஆதார் அடையாள அட்டை இல்லை. இதனால் மாலதியை, கடந்த ஆண்டு மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து விலக்கி உள்ளது.

Crime

இதனால் விரக்தி அடைந்த மாலதி தன்னை பணியில் இருந்து நீக்கியதை கேட்டு முறையிட்டுள்ளார். ஆனால், அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து நிர்வாகம் கேட்ட ஆதார் அட்டையை விண்ணப்பித்து அதை பெற்றுக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால், இந்த முறையும் அவருக்கு பணி வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த மாலதி மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.